பொதுவாக திரையுலகில் நடிக்கும் அனைவரும் எதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளார்கள் எனலாம் இப்படி இருக்கையில் இவர்கள் பொதுவெளியில் சென்றாலும் சரி அல்லது இவர்களை பற்றிய சிறு தகவல்கள் வெளிவந்தாலும் அது மக்கள் மற்றும் இணையத்தில் பரவி வேற லெவலில் டிரண்டாகி விடுகிறது . இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் தல அஜித்குமார் அவர்களின் மகள் பற்றிய தகவல் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சினிமா பிரபலங்களை பொருத்தவரையில் வீக் எண்டில் பார்ட்டியில் கலந்து கொள்வது ஒரு சாதாரண விஷயம் தான். அவ்வாறு பார்ட்டியில் கலந்து கொண்டு செம போதையில் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரபலங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் தற்போது அஜித் ஒரு இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அஜித் தனது சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்பவர் என்பதால் எந்த சமூக வலைத்தளத்திலும் அவர் செயல்பாட்டில் இல்லை. 

ஆனால் சமீபகாலமாக அஜித்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவரது புகைப்படங்கள் தினமும் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு இரவு விருந்தில் தனது குழந்தைகளுடன் அஜித் கலந்துகொண்டுள்ளார். அனைவர் கையிலும் சியேர்ஸ் சொல்வது போல் உள்ளது. மேலும் ரிச்சர்ட் கையில் கண்டிப்பாக பீர் தான் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் தவிர்த்திருக்கலாம். பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் என்ற சமூகத்தில்தான் நாம் இருந்து வருகிறோம். 

இதனால் குழந்தைகளுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறோம். ஆனால் குழந்தைகள் முன்னிலையில் இவ்வாறு மது அருந்துவது அவர்களுக்கும் இதன் மீது ஆர்வத்தைத் தூண்டக்கூடும். பெற்றோர்களாக இருக்கும் நாமலே இவ்வாறு குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை போதிக்க கூடாது. பெற்றோர்களே இதை செய்கிறார்கள், அப்போ இது சரிதான் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரக்கூடும். ஆனால் எல்லாவற்றிற்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஜித் இவ்வாறு செய்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இணையத்தில் இந்த போட்டோ கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறைந்த பட்சம் புகைப்படம் வெளிவராமல் இருந்துருக்கலாம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here