தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு பரிமாணங்கள் ஏற்பட்டு மாறுபட்ட  கதையம்சங்களை கொண்ட திரைபடங்கள் வருகின்றன . இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் எதை விரும்புகிறார்களோ அப்படி பட்ட படங்கள் வெளியாகி  மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெற்று வருகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வாறு படங்களை இயக்கி வருகின்றன இயக்குனர்கள் . மேலும் பல புதுமுக இயக்குனர்கள் பல மாறுப்பட்ட கதைகளை இயக்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் எப்போதும் போல திரைக்கதைகளை வெளிபடுத்தாமல் மக்களிடையே புதுவிதமான கதைகளை கொடுத்து அவர்களுடைய சிந்தனைகளை தூண்டும் வகையில் படங்களை எடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சாதியை மக்களிடத்தில் இருந்து விளக்கும் எண்ணத்தில் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் மாரி செல்வராஜ்.

இவர் தான் இயக்கிய முதல் படமான பரியேரும் பெருமாள் படத்திலேயே மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பை பெற்றதோடு பிரபலமானார்.இந்த படம் மக்கள் மத்தியில் சாதியதுவத்தை முற்றிலும் வெறுக்கும் வகையிலான படமாக அமைந்ததோடு ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்க்கப்ட்டது. இந்த படத்தை தொடர்ந்து தெனனிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அவர்களை வைத்து கர்ணன் எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது இருப்பினும் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பலத்த எதிர்பார்ப்புகளையும் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது.

இந்த வகையில் இந்த படத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வெளியிட்டுள்ளார் இதன் இயக்குனர்.இந்த படத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, கௌரி கிஷன், நட்டி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் நடித்திருக்கும் அனைவருக்கும் இணையான கதாபாத்திரத்தில் நடிதுள்ளனர். அந்த வகையில் இந்த படத்தில் தனுஷின் அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பவர் தான் லட்சுமி பிரியா .இவரை அனைவருக்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும் காரணம் தமிழில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய லட்சுமி குறும்படத்தில் நடித்த நடிகை தான் இந்த லட்சுமி பிரியா.

தமிழில் 2011-ம் ஆண்டு வெளியான லட்சுமி குறும்படத்தில் நடித்து ஒரே நாளில் வலைத்தளங்களில் பிரபலமானவர் தான் லட்சுமி. இந்த குறும்படத்திற்கு பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் கிளம்பியது இருப்பினும் இதையெல்லாம் தாண்டி மிக பிரபலமடைந்தது அந்த குறும்படம். இந்த நிலையில் கர்ணன் படத்தில் தனது தம்பியான தனுஷ் வேலைக்கு போனால் தான் திருமணம் செய்துகொள்வேன் என இருப்பவர் தான் லட்சுமி. இப்படி இருக்கையில் நிஜ வாழ்க்கையில் அவரது கணவர் யார் தெரியுமா, விவிஸ் லக்ஷ்மன் 281, டோன்ட் டேல் தே கவர்னர் போன்ற பல புத்தங்கங்களை எழுதிய பிரபல எழுத்தாளர் வெங்கட்ராகவன் ஸ்ரீனிவாசன் என்பவர் தான் திருமணம் செய்துள்ளார் நடிகை லட்சுமி பிரியா. கர்ணன் படம் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.