அந்த காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மட்டும் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்கள். இதையும் தாண்டி சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கும் சற்றே பிரபலமாக தொடங்கினார்கள். ஆனால் தற்சமயம் இவர்களுக்கு எல்லாம் போட்டியாக சின்னத்திரை வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் வெகு பிரபலமாக உள்ளார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் அவர்களை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது நகைச்சுவையான பேச்சாலும் துடிப்பான நடிப்பாலும் பலரது மனதை கொள்ளை கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டளாத்தையே வைத்துள்ளார். இவர் ஆரம்பத்தில் தனது கலைபயணத்தை ரேடியோ ஆர்ஜே வாக துவங்கினார். அதன் மூலம் மக்க்ளளிடையே பலத்த வரவேற்பை பெற்றவர் தொடர்ந்து விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் இவரது இயல்பான நடிப்பும் சுட்டித்தனமான பேச்சாலும் இன்றளவு வரையிலும் தொடர்ந்து முன்னணி தொகுப்பாளாராக இருந்து வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியின் பல முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்து வருவதோடு வெள்ளித்திரையிலும் கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் தான் எப்படி இந்த திரைத்துறையில் முன்னேறி வந்தது போல பல இளைஞர்களுக்கும் தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அந்த வகையில் குக் வித் கோமாளி புகழை பிரபலபடுத்தியதில் இவருக்கும் ஒரு முக்கியம் உண்டு எனலாம். இவ்வாறான தற்சமயம் சின்னத்திரை வெள்ளித்திரை என பிசியாக இருந்தாலும் மாகபா எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு வைராளாகி வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அதே திருட்டு முழி, அப்படியே பாக்கறதுக்கு அழகா இருக்கீங்க என்பது போலான பல விமர்சனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by MA KA PA Anand (@makapa_anand)