பொதுவாக இயக்குனர்கள் தங்களது கருப்பனைக்கு ஏற்றவாறு எந்த அளவுக்கு அந்த படத்தை வெற்றி படமாக மாற்ற முடியுமோ  அந்த அளவுக்கு அவர்களது கவனம் அந்த படத்தில்  முழுவதும் செலுத்தி சிறு சிறு கதாபாத்திரங்களில் கூட அதிகமான கவனம் செலுத்தி அந்த படத்தை வெற்றி படமாக மாற்றுவார்கள்.  தென்னிந்திய தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் பல வெற்றி படங்களை தந்துள்ளார்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் பல வேறுபாடு இருக்கும். ஒரு படத்தை பார்தாலே இந்த படம் இந்த இயக்குனரால் எடுக்கப்பட்டது என்று நாமே சொல்லும் அளவிருக்கு அவர்கள் தொடர்ச்சியாக அவர்களது பாணியில் திரைப்படங்களை தந்து கொண்டிருகிறார்கள்.

அந்த வகையில் பிரமாண்டம் என்ற சொல்லிற்கு தமிழ் சினிமாவில் இந்த இயக்குனர் படம் தான் என்று அனைவர்க்கும் தெரியும் அளவுக்கு திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். இதனால் ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு புதிய தொழில்நுட்ப விஷயங்களை படத்தில் செய்திருப்பார். இந்திய அளவில் அவரது படங்கள் பெரிய அளவில் ரீச் உள்ளது.

கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகும் இந்தியன் 2 படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங், ஆனால் பட விவகாரம் பிரச்சனையிலேயே போய் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்குனர் ஷங்கரின் மகள் டாக்டர் அதிதி ஷங்கரின் திருமண செய்தி வந்துள்ளது. நாளை பொள்ளாச்சியில் 100 நபர்களுக்கு மத்தியில் திருமணம் நடக்க இருக்கிறது.

அதிதி ஷங்கர் திருமணம் செய்துகொள்ள போகிறவர் யார் என்றால், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.  தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது  ஷங்கரின் மருமகனின் புகைப்படம் சமுகவளைதலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.