பொதுவாக சினிமா துறையாக இருந்தாலும் சரி , சின்னத்திரையாக இருந்தாலும் சரி , இதில் நடிக்கும் நடிகைகள் நடிகர்கள் தனது முதல் திருமணம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வது என்பது மிகவும் குறைவாக தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் தனது முதல் திருமணம் விவாகரத்தில் தான் போகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக சினிமா பிரபலங்களை பலரை பட்டியலிடாலம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதிரியான அடிக்கடி விவாகரத்து என்பது சினிமா பிரபலங்களிடத்தில் சர்வ சாதாரண விஷியமாக தான் கருதப்படுகிறது. அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜலுக்கு தற்போது  திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி. சன் மியூஸிக், கலைஞர் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதன் கோரியோகிராஃபரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித சலிப்பு சங்கடமாக இருந்து வந்தது. இவர் எப்போதும்  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை காஜல், அவ்வபோது அரசியல் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருவது வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் திருமணம். கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க.. என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மாப்பிள்ளை யாரு என்று கேட்டு வருகின்றனர்.  தற்போது இந்த தகவல்கள் சமுகவளைதலங்களில் தீயாய் பரவிவருகிறது.