தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது கிசு கிசுக்களும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு இளம் அன்டியாக்ர்களும் நடிகைகளும் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி கொள்கிஆர்கள் இப்படி கடந்த மாதத்தில் இருந்து யாஷிகாவில் தொடங்கி மீரா மிதுன் வரை தற்போதைய இளம் நடிகைகளை பற்றிய சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டிருக்கும் சினிமா நட்சத்திரங்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல் நாயகியாக மாறி தற்போது சினிமா நாயகியாக வலம் வருகிறார்.

தற்சமயம் இருக்கும் இளம் நடிகர்கள் பலரும் தங்களுடைய படங்களில் பிரியா பவானி சங்கருடன் ஜோடி சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதைப்போல் பிரியா பவானி சங்கர் நடிப்பில் மட்டும் கிட்டதட்ட பத்து படங்களுக்கு மேல் ரிலீசுக்கு ரெடி ஆக இருக்கிறது. மேலும் ஒரே நேரத்தில் பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான கசட தபற, ஓமணப் பெண்ணே, குருதி ஆட்டம், பொம்மை போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

சமீபகாலமாக பிரியா பவானி சங்கரை திருமணமான இளம் நடிகர் ஒருவர் தொடர்ந்து சமூக வலைதளம் மூலமாக அவருக்கு டார்ச்சல் கொடுப்பது, ஜொள்ளு விடுவது என செம சேட்டைகள் செய்து வருவது பிரியா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எப்போதுமே தன் மனதில் பட்டதை சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார் பிரியா பவானி சங்கர். இது ரசிகர்களுக்கும் பிடித்தது. ஆனால் பிரியா பவானி சங்கர் எப்போதெல்லாம் சமூக வளைதளத்தில் பதிவு போடுகிறாரோ அப்போதெல்லாம் காமெடி நடிகர் சதீஷ் அவரை ஜொள்ளுவிடுவதும், அவரை கிண்டல் செய்யும் விதமாக அவரது பதிவுகளுக்கு கீழ் தன்னுடைய பதிவை போட்டும் வருகிறார்.

பப்ளிக்காக பல்லிலிப்பதை பார்த்த ரசிகர்கள் பலமுறை அவரை டேமேஜ் செய்தாலும் அவர் அடங்கிய பாடில்லை. இத்தனைக்கும் சமீபத்தில் தான் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. நட்பு என்கிற பெயரில் அவர் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து அவரது பதவிக்கு கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.