நம்மில் பெரும்பாலானோருக்கு புது ஆடைகளை வாங்குவதில் அதை அணிவதிலும் அலாதி பிரியம் இருக்கும் இதற்காக சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். பலரும் சம்பாரிப்பதில் பாதியில் குடும்ப செலவு செய்வதையே வாடிக்கையாக வாடிக்கையாக வைத்திருப்பர். ஆனால் சிலர் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அதிலும், ஆடை வாங்குவாதில் ஆர்வத்தை காட்டுவார்கள். ஆடைகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். அதன்பின்னர், குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர். அடுத்தாக பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை கொண்ட உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர்.

சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம். வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான கலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. குளிர்காலத்திற்கு ஏற்ற உடைகளாக சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன ஏற்றவை, அவை வெப்பத்தை கடத்தாதவை.

பருத்தி மற்றும் சின்தடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. குளிர் நிறங்கள் குளுமையுடன் தொடர்புடையன., இதற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெண்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.