ஆயுதபூஜை என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது பொரியாக தான் இருக்கும் இதை தாண்டி பொரி என்று சொன்னவுடன் பலருக்கும் நினைவில் வருவது பிரபல சாட் அயிட்டமான பேல் பூரி தான். நாவூறும் சுவையைக் கொண்ட பேல் பூரியில் கூட பொரி தான் அதிக அளவில் கலக்கப்படுகிறது. பஃப்டு ரைஸ் என்று அழைக்கபடும் பொரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் அதிகம். இது எடை இழப்புக்கு எப்படி எதவுகின்றது தெரியுமா?

இலேசாகவும், குறைந்த கலோரிகளை உடையதாகவும் இருக்கும் பொரி எடை இழப்புக்கு சிறந்த உணவாகும். பொரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்களின் பசியை போக்குவதோடு, அதிகப்படியாக சாப்பிடுவதையும் தடுக்கிறது. எனவே, இது எடை வேகமாக குறையவும் உதவுகிறது.  மனித உடலில் எலும்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஏனெனில், எலும்புகள் தான் தசைகள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு உரிய வடிவம், அமைப்பைத் தருகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, தியாமின் மற்றும் பைபர் நிறைந்த பொரியை எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்பு செல்கள் நன்றாக வளர்ச்சி அடைவதை உறுதி செய்யும். ​பக்க விளைவுகள் 

பொரி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுத்தாலும், அதிக அளவு பொரியை சாப்பிடுவது நீரிழிவு நோயை உண்டாக்கும். இதற்கு பொரியில் உள்ள அதிக கிளைசெமிக் குறியீடு தான் காரணம். அதேபோல், பொரி உடல் எடையைக் குறைக்கும் என்றாலும், அதிகப்படியான பொரியை உண்டால் அதில் உள்ள கார்போ ஹைட்ரேட் உடல் பருமனை உண்டாக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.