அந்த காலம் தொட்டே நமது முன்னோர்கள் நமது காலநிலைகளுக்கு ஏற்ப நமது கிரக நிலைகளையும் கணித்து வைத்து சென்றுள்ளனர் . இப்படி இருக்கையில் நவராத்திரியின் 5ம் நாளான இன்று 12 ராசிக்காரர்களின் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தினை கொண்டு ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

அசுவினி: பொறுமைக்குப் பரிசாக நல்ல திருப்பங்கள் உண்டாகும். பரணி: சுபவிரயங்கள் இன்று ஏற்படும். உங்களின் சேமிப்பு உயரும். கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் சிறு தொல்லை ஏற்பட்டு சரியாகும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: பணி சம்பந்தமான சிறு பயணம் மேற்கொள்வீர்கள். ரோகிணி: தொழிலில் வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் எதிர்பாராத சந்தோஷ திருப்பங்கள் உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தாயின் உடல் நலம் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் அகலும். திருவாதிரை: எதிர்பார்த்த விஷயங்கள் எளிதில் நிறைவேறும். மகிழ்வான நாள். புனர்பூசம் 1,2,3: அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் சுபவிஷயம் நடைபெறும்.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். கவலை ஒன்று தீரும். பூசம்: உறவினர் ஒருவரின் அவசரச் செயலால் ஏற்பட்டிருந்த பகை அகலும். ஆயில்யம்: வழக்கு ஒன்று சாதகமான திசையை நோக்கிச் செல்லும்.

சிம்மம்:

மகம்: உங்களை விட்டு விலகிய ஒருவர் மறுபடியும் ஒன்று சேர முயற்சிப்பார். பூரம்: பொதுவாழ்வில் உங்களுக்கு புதிய அந்தஸ்து கிடைக்கும். உத்திரம் 1: நிலம், வீடு சேர்க்கை உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும்.