இந்திய திரையுலகினருக்கு மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகினருக்கும் இந்த ஆண்டு சாற்றி மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இப்படி பிரபலங்களுக்கு கொரோனா ஏற்படுவதும் பின்னர் சிகிச்சையில் இருப்பதும் என அவ்வபோது செய்திகள் வந்து ரசிகர்களுக்கு வருத்தத்தினை ஏற்ப்படுத்தி வந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி பாளிவூட்டை விட தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி பிரபலங்களும் மறைந்த செய்தி நாளுக்கு நாள்  வந்து கொண்டே இருந்தது.

அது மட்டுமல்லாது  திரைப்பட பணிகளும் நின்று, ஏற்கனவே பட வேலைகள் முடிந்த திரைபபங்களும் வெளிவராமல் இருந்து திரையுலகை ஆட்டிப்படைத்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனும் பிரபல தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு உடல் நலக் குறைவாக காலமானார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர்.

நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் நியூ இயர் கொண்டாட்டத்துக்காக துபாய் சென்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரவியதாக சில தினங்களுக்கு முன்னதாக ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் மகேஷ் பாபு இறுதி சடங்கில் எப்படி கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, அல்லூரி சீதராமராஜு படத்தில் குழந்தை அல்லூரி சீதராமராஜுவாக 1974ம் ஆண்டு ரமேஷ் பாபு சினிமாவில் அறிமுகமானார். 1987ம் ஆண்டு வெளியான சாம்ராட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பஜார் ரவுடி, பிளாக் டைகர், பச்ச தோரணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், 1997ம் ஆண்டு வெளியான என்கவுன்ட்டர் படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகினார். பின்னர் 2004ம் ஆண்டு கிருஷ்ணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு காரணமாக ரமேஷ் பாபு மறைந்தது திரையுலகத்திற்கு பெரிய இழப்பாக மாறியுள்ளது.