தமிழ் சினிமாவில் எத்ஹ்னையோ நடிகைகள் இருந்தாலும் கூட இந்த மலையாள நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேர்ப்பலவிர்க்கு வேறு எந்த நடிகைகளுக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். ஏன் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்து இருக்கும் நயன்தாரா கூட மலையாள திரையுலகை சேர்ந்தவர் தான். இப்படி வருடா வருடம் எதாவது ஒரு மலையாள நடிகை தமிழ் திரையுலகில் பிரபலமாவார்.

இப்படி மலையாளத்தில் வெளியான ஒரு ஆடார் லவ் என்ற படத்தில் தனது கண் அசைவின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர். இப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் மூலம் இந்திய திரை உலக ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார். சென்ற ஆண்டு தெலுங்கில் வெளியான செக் என்ற படத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பிரியா வாரியர் தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் ஸ்ரீதேவி ஆக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இதில் பிரியா வாரியர் இரண்டு இடங்களில் நிர்வாணக் காட்சியில் நடித்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 7.1 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

கண்ணிலே மயக்கும் பிரியா வாரியர் வெரைட்டி வெரைட்டியாக புகைப்படத்தை எடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அண்மையில் பிரியா வாரியர் கடற்கரையில், கருப்பு நிறப் புடவையில் ஒய்யாரமான நடையில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர் மத்தியில் வைரலாகி பரவியிருந்தது. தற்போது ட்ரான்ஸ்பரண்ட் ஆன உடையில் அட்டகாசமான கவர்ச்சி காட்டி கடற்கரையில் சூரியனை ரசித்தபடி பாறைமேல் அமர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி ட்ரெண்டாகி வருகிறது.