தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக முன்னணி நடிகைகளின் வரிசையில் டாப் லிஸ்ட்டில் அதிகளவு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகையான சமந்தா தான். இவ்வாறு படங்களில் பிசியாக படங்களில் நடித்து வரும் நிலையிலும் இவரது குடும்ப வாழ்க்கை பற்றிய பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. காரணம் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில் எதிர்பாரதவிதமாக இருவருக்கும்

இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து தற்போது தனித்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமந்தாவின் குடும்ப வாழ்க்கை குறித்தும் விவாகரத்து குறித்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவரது நெருங்கிய தோழியான சர்ச்சை பாடகி சின்மயி பேசியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர் தனது பதினைந்தாவது வயதில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் பாடும்போது எனக்கு மணிரத்னம் யார் ஏஆர் ரகுமான் யார் இந்த பாடலை எல்லாம் யார் எழுதினார்கள் என்று கூட தெரியாது அதேபோல்

அந்த பாடலுக்கு பின்னர் எனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்கள் ஆனால் எனக்கு அடுத்த பாடல் வாய்ப்பு கிடைக்கவே இரண்டு வருடங்களுக்கு மேலானது. இதையடுத்து பேசிய சின்மயி சமந்தா குறித்த பல தகவல்களை கூறியிருந்தார் அதில் ஒரு பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பதே அவரது கணவரும் கணவரின் வீட்டாரும் இப்படி ஒரு நிலையில் அவள் அவர்களை விட அதிகமாக சம்பாதிக்கும் பட்சத்தில் அது அந்த குடும்பத்திற்கு வயித்தெரிச்சலை ஏற்படுவதோடு அவளை நிம்மதி இல்லாத நிலைக்கு கொண்டு சேர்க்கிறது . இப்படி ஒரு நிலையில் சமந்தா இதில் கடந்து வந்த

பாதை , தைரியம், தன்னம்பிக்கை இது அனைத்தும் மற்ற பெண்களிடமும் இருக்க வேண்டும். மேலும் அவர் தனித்து நிற்கும் நிலையிலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட்டில் ரூசோ பிரதர்ஸ் படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து சமந்தா வாழ்க்கையில் அடுத்த கட்ட வெற்றியை தொட்டு மென்மேலும் உயரவேண்டும் அதேபோல் அவர் ஆஸ்கார் விருது வாங்கும்போது நன் அதை கைகட்டி நின்று பார்க்கவேண்டும் என பூரிப்புடன் கூறியுள்ளார்… இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது ….