சின்னத்திரையில் பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதோடு அதில் நடிக்கும்  நடிகர் நடிகைகளும் பலத்த பிரபலத்தை பெற்று தற்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் பல முன்னணி வெற்றி படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதிலும் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் புகழ். ஆரம்பத்தில் இதே

சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளில் இரு சில காட்சிகளில் வந்து போன நிலையில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பதோடு ஹீரோவாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு தனது பிறந்தநாள் அன்று பென்சி என்பவரை காதலிப்பதாக அறிவித்த நிலையில் இவர்களது திருமணம் எப்போது பலரும் கேட்டுவந்த நிலையில் கடந்த சில

தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் இருக்கும் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் மிக கோலகலமாக புகழ் மற்றும் பெனசி ஆகியோரது திருமணம் நடந்து முடிந்தது மேலும் இதில் நெருக்கமான உறவினர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் புகழ் தனது திருமண

புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில் மேலும் ஒரு திருப்பமாக இவர்கள் இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னரே பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுசெயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் பதிவு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அப்போது எடுக்கபட்ட புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது…..