தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டு இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இதனைதொடர்த்து மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் இவரது படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம். இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற

 

நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்த இந்த படம் பொங்கலுக்கு திரையில் வெளியாகும் படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் சினிமாவை தாண்டி அரசியல் மீதும் ஆர்வம் காட்டி வரும் வகையில் அவர் விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை வழிநடத்தி வருகிறார். இதையடுத்து இதன் செயல்பாடுகள் குறித்த பல விளக்க கூட்டங்கள்

அவரது அலுவலகமான பனையூரில் அவ்வபோது போது நடந்து வரும் நிலையில் நேற்றும் வழக்கம் போல் அங்கு பல திரளான ரசிகர்களுடன் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அங்கு திடீரென தளபதி விஜய் அவர்கள் வருகை தந்து அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தார் அதுமட்டுமின்றி ஐந்து வருடங்கள் கழித்து தளபதி விஜய் அவர்கள் அவரது ரசிகர்களை சந்திந்த நிலையில் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டுள்ளார் . மேலும் இதில் நாமக்கல், சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல மக்கள் இயக்க நிர்வாகிகள்மற்றும் ரசிகர்கள் கலந்து

கொண்டனர். மேலும் அவர்களுடன் தனது வாரிசு படத்தின் ரீலிஸ் மற்றும் இயக்க வேலைகள் குறித்து பல முடிவுகளை எடுத்த நிலையில் வருகை தந்த அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. இதையடுத்து தளபதி விஜய் அவர்கள் இந்த நிகழ்வில் சிம்பிளாக வெள்ளைநிறத்தில் சட்டையும் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்டையும் அணித்து வந்து இருந்தார் இதில் தளபதி விஜய் அணிந்திருந்த பர்பெர்ரி எனும் அந்த பிராண்ட் சட்டையின் விலை மட்டும் இந்திய மதிப்பின்படி சுமார் 40, 000-யை தாண்டுமாம் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது….