தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் மக்களை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார். வெறுமனே படத்தில் மட்டும் ஹீரோவாக நடிக்காமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து வரும் தல அஜித் அவர்கள் கார் ரேஸ், பைக் ரேஸ் ட்ரோன் செயல்பாடு, துப்பாக்கி சுடுதல் என பலதுறைகளில் சாதனை படைத்து வருகின்றன்ர். இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர்

ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது அதே கூட்டணியில் துணிவு படம் தயாராகி வரும் நிலையில் அந்த படம் வரும் பொங்கலுக்கு திரையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது . இப்படி இருக்கையில் அஜித்குமார் அவர்கள் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு நம் அனைவருக்கும் நன்கு அறிந்த ஒன்றே மேலும்

இவர்களுக்கு அனோஷ்கா எனும் மகளும் ஆத்விக் எனும் மகனும் உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் நேற்று ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறும் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஷாலினியின் பிறந்தநாள் விழாவில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் விழாவில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள்

மத்தியில் வைரலாகி வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் தல அஜித்தின் மகளை பார்த்த பலரும் வாயடைத்து போய்விட்டனர். காரணம் நன்கு வளர்ந்து இளம் ஹீரோயின்கள் போல் இருக்கும் அவரது மகள் மாடர்ன் உடையில் வலம் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இதை பார்த்த பலரும் அப்ப தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்பது போல கருத்துகளை கூறி வருவதோடு அவரை வர்ணித்து வருகின்றனர்…..