பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சமையலை மையமாக கொண்ட ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளை போல வெறுமனே சமையலை மட்டும் இல்லாமல் நகைச்சுவை கலந்த நிகழ்ச்சியாக இருந்த நிலையில் இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு இதற்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான முக பாவனைகள் மற்றும் பேச்சால் பலரையும் சிரிக்க வைத்ததோடு தனது ரசிகர்களாக மாற்றி வைத்திருப்பவர் பிரபல நடிகர் புகழ். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானதை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் வலிமை, எதற்கும் துணிந்தவன் , யானை போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் எனும் படத்தில்

கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் குறுகிய காலத்திலேயே பிரபலமான புகழ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான பெண்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவரது திருமணத்தில் முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகழ் தனது இணைய பக்கத்தில் நான் அப்பாவாகி விட்டேன் என பதிவிட்டு இருந்தார் இதையடுத்து இந்த பதிவை பார்த்த பலரும் வியந்த நிலையில் அது குறித்து விளக்கம் கேட்டபோது

அவருக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய நிலையில் அவரது மனைவி அவருக்கு பிறந்தநாள் பரிசாக நாய்க்குட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த நாய்குட்டிக்கு இகிமுஸ் என பெயர் வைத்தது மட்டுமின்றி அந்த நாய்க்கு நான்தான் அப்பா என கூறியுள்ளார். இதையடுத்து இகிமுஸ் நாய்க்கு தந்தையான புகழுக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதோடு இது இருக்கட்டும் குட்டி புகழ் எப்போது வருவான் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்…..

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)