தற்போது வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இதனைதொடர்ந்து இந்த தொடர்களில் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் சீரியல்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கி வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து

தொடர்களும் மக்களிடையே அதிகளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணி ராணி என பல முன்னணி தொடர்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகர் வேணு அரவிந்த். இவர் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு எதிர்பாரதவிதமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அதன் விளைவாக

நிமோனியா வந்தது. இதனைதொடர்த்து இதற்காக சிகிச்சை அளிக்கையில் இவருக்கு மூளையில் சிறு கட்டி இருப்பதை அறிந்த மருத்துவர்கள் உடனே அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளார்கள். இந்நிலையில் அதன் பாதிப்பாக அவர் கோமாவிற்கு செல்லும் நிலைக்கு தள்ளபட்டார் என பல தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த தகவலை பார்த்த அவரது நெருங்கிய பிரபலங்கள் பலரும் வேணு நன்றாகத்தான் உள்ளார் அவர் விரைவில் குணமாகி வந்துவிடுவார் என கூறி

வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வேணு நான் நலமுடன் தான் இருக்கிறேன் அதோடு உயிரோடு தான் உள்ளேன் அதனால் இனிமேல் என்ன நடக்கபோகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். எனக்கு தலையில் சின்ன கட்டி இருந்தது அதையும் நீக்கி விட்டார்கள் இப்போது நான் நலமாகத்தான் இருக்கிறேன் என கூறியுள்ளார் மேலும் நான் நிறைய வில்லனாக நடித்து பலரது சாபத்தை வாங்கிய காரணத்தால் தான் எனக்கு இந்த ,மாதிரி நடக்கிறதோ என உருக்கமாக பேசியிருந்தார்…..