கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் தொடர்ந்து பல முன்னணி திரையுலக பிரபலங்களும் தங்களது இளம் வயது மற்றும் குழந்தைப்பருவ புகைப்படங்களை அவர்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் சூப்பர் ஸ்டார் கையில் ஒரு சிறுமியை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரலாகி

வருகிறது. தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவ்வாறு இருக்கையில் அறுபதை கடந்த நிலையிலும் படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வரும் ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இதையடுத்து மேலும்

இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைபடத்தில் இருக்கும் சிறுமி வேறு யாருமில்லை பிரபல முன்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராம் தான் அது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நூறுக்கும் மேற்பட்ட

பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவ்வாறு இருக்கையில் அவர் சிறுவயதாக இருக்கும் போது ரஜினிகாந்த படபிடிப்பின் போது அவரை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் அண்மையில் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…..