பொதுவாக சினிமாவில் படங்களில் பொறுத்தவரை அதில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதைகாட்டிலும் அந்த படத்தில் குணசித்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் உள்ளது எனலாம். இப்படி இருக்கையில் 80,90-களின் காலகட்டத்தில் இருந்து இன்றளவு வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி பல ரசிகர்களின் மனதில்

இன்றைக்கும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் பாண்டியராஜ். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் எனும் ஆசையில் வந்த நிலையில் இவரது உயரத்தை காரணம் காட்டி இவர் நிராகரிக்கப்ட்டதை அடுத்து உதவி இயக்குனராக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கினார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராக இருந்ததை அடுத்து பல படங்களில் துணை நடிகராக நடித்து மக்கள்

மத்தியில் தனது நடிப்பின் மூலமாக பலத்த பிரபலத்தை பெற்று அதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இன்றளவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த 1986-ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து இவருக்கு பிர்த்திவி ராஜன், பல்லவராஜன், பிரேம்

என மூன்று மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடித்துவிட்ட நிலையில் தனது மனைவி மகன்கள் மற்றும் மருமகள்களுடன் ஒன்றாக இருக்கும் குடும்ப புகைப்படத்தை சமீபத்தில் தனது இணைய பதிவிட்டு இருந்தார் பாண்டியராஜ் அவர்கள். இதனைதொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…..