பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பல பிரபலங்கள் கலந்துகொண்டு மேலும் தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த

பிக்பாஸ் சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் தற்போது வீட்டிலேயே இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிய நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக காதலித்து வருபவர்கள் ஆமீர் மற்றும் பாவனி. இதில் பாவனி ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் தமிழில் சின்னத்திரையில் வெளிவந்த பிரபல முன்னணி தொடரான சின்னதம்பி தொடரில் கதையின் நாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி

கொண்டார். மேலும் பவனி ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் அவரது கணவர் எதிர்பாரதவிதமாக காலமானார். இதையடுத்து தனிமையில் வாழ்ந்து வந்த பாவனி தற்போது அமீருடன் தனது வாழ்க்கையை பகிர்ந்து வருகிறார். இதையடுத்து இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் டைட்டிலையும் தட்டி சென்றனர். இதனைதொடர்ந்து தல அஜித்குமார் நடிப்பில்

வெளியாகவிருக்கும் துணிவு படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் பவனி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த வீடியோவில் பாவனி கையில் சரக்கு பாட்டிலுடன் குத்தாட்டம் போட்டபடி இருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம பவனி இப்படி மாறிட்டாங்க என வாயடைத்து போனதோடு அவரை கண்டபடி வசைபாடி வருகின்றன்ர்…….