தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு பிரபல முன்னணி நடிகரான நாகசைதன்யாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் சினிமாவில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது. இருப்பினும் முன்பை காட்டிலும் தனது நடிப்பை முழுவதுமாக

வெளிகாட்டிய சமந்தா தற்போது முன்னணி நடிகைகள் மத்தியில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கொடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் புகைபடத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த பதிவில் மருத்துவமனையில் கையில் ட்ரிப் இறங்குவது போன்ற புகைப்படத்துடன் தனக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை ஆட்டோஇம்முன் நோய் இதற்காக பலத்த சிகிச்சை பெற்று வருவதாகவும்

கூறியிருந்தார். இதற்கிடையில் சமந்தா கதையின் நாயகியாக நடித்த யசோதா திரைபடத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சிக்காக போடோஷூட் நடத்தி இருந்த அந்த புகைபடத்தில் முன்பை காட்டிலும் உடல் மெலிந்து மிகவும் சோர்வாக காணப்பட்டு இருந்தார். இப்படி இருக்கையில் தற்போது சமந்தாவின் உடல்நிலை மிக மோசமான நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாகவும்

அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்டபோது, சமந்தா தற்போது அவரது வீட்டில் நலமுடன் ஓய்வு எடுத்து வருவதாகவும் அவருக்கு உடல்நிலை நல்ல முன்னேற்றம் கூறிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக வரும் தகவல்கள் வெறும் வதந்தி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்……