தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான பல புதுமுக இளம் நடிகர்கள் ஹீரோவாக வந்த போதிலும் அவர்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக இருப்பதோடு அவர்களுக்கே சவால் விடும் வகையில் படங்களில் மாசாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். அந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து பல மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து நடிப்பிற்கே ஒரு இலக்கணமாக இருந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சில காலம் நடிப்பதை தவிர்த்து அரசியல் மீது ஆர்வம் காட்டி வந்த நிலையில் இனி அவர் சினிமாவில்

அவ்வளவு தான் என பலரும் எண்ணிய நிலையில் அவர்களுக்கே பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது இந்த படத்தை தொடர்ந்து இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் கலக்கி வரும் கமல் அவர்கள் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி

வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனரான விஸ்வநாத் அவர்களை ஹைதரபாத் சென்று நேரில் சந்திந்து அவருடன் வாழ்த்து பெற்றதோடு அங்கு பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதனைதொடர்த்து நேற்று மாலை சென்னை திரும்பிய கமல் அவர்களுக்கு எதிர்பாரதவிதாக திடீரென பலத்த காய்ச்சல் வந்த நிலையில்

உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை சென்னையில் உள்ள ராமச்சந்திர மருத்துவமனையில் சிக்சைக்காக சேர்க்கப்பட்டார். இதயடுத்து அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் இன்று காலை பூரண நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது……