கடந்த சில வருடங்களாக சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் பொருட்டு தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் கூட நயன்தாரா, காஜல் , ஆதி-நிக்கி கல்ராணி,ஸ்ரேயா என பலரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டாவும் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் ரகசியமாக

திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கீதா கோவிந்தம் இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து

அடுத்தடுத்து இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது நெருக்கமாக இருக்கும்படியாக புகைப்படங்களை பதிவிடுவது என இருந்து வந்ததோடு சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாரின் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

இருப்பினும் இருவர் தரப்பில் இருந்து இதுவரை இருவரும் காதலிப்பதாக எந்தவித அறிவிப்போ அல்லது மறுப்போ வராமல் இருந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் வெளியாகி வருவதோடு இருவரும் மாலையுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி வருகிறது இது குறித்து விசாரிக்கையில் அந்த புகைபடம் ரசிகர்களின் வேலை என தெரியவந்துள்ளது……