தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் அதில் நடிக்கும் நடிகர்களுமே மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இல்லத்தரசிகள் மத்தியில் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இதையடுத்து அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை

ஏற்படுத்தி கொள்கின்றனர் . இப்படி இருக்கையில் முன்னணி தனியார் சேனலில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த சந்திரலேகா தொடரில் கதையின் நாயகியாக நடித்து பலத்த பிரபலத்தை பெற்றவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஸ்வேதா பண்டகர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்னரே தல அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் படத்தில்

அவருக்கு தங்கையாக நடித்து இருந்தார் இதனைதொடர்ந்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து பல முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல முன்னணி சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது ஸ்வேதா அடுத்தகட்டமாக திருமணம் செய்ய முடிவு செய்து தனது நீண்ட நாள் காதலாரான பிரபல முன்னணி

தொகுப்பாளர் மால் முருகாவை கோலாகலமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு 37- வயதை கடந்த நிலையில் தற்போது சீரியல்கள் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார் அம்மிணி இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது மேலும் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……