தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருவதோடு கோடிகளில்  சம்பளத்தை வாங்கி கொடிகட்டி பறந்தவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர்களது திருமண

வாழ்க்கை பாதியிலேயே விவாகரத்தில் போய் முடிந்தது. இதையடுத்து சில காலம் தனிமையில் வாழ்ந்து வந்த சமந்தா அதன் பின்னர் நடிப்பின் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தும் வகையில் முன்பை காட்டிலும் எல்லைமீறிய நடிப்பில் கலக்க ஆரம்பித்தார். அதன் பலனாக அம்மினிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி என பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இவ்வாறு பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்

தனது இணைய பக்கத்தில் தனக்கு மைய்டோசிட்ஸ் எனும் ஆட்டோ இம்முன் அரிய நோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார். இதனிடையில் அவரது நடிப்பில் வெளியாக இருந்த யசோதா படத்திற்கு ப்ரோமோசன் வேலைகளையும் மிகுந்த சிரமத்துடன் செய்து கொடுத்து இருந்தார். இதையடுத்து அந்த நோயின் தாக்கம் துளியும் குறையாத நிலையில் தற்போது அதற்கான மேற்

சிகிச்சைக்காக தென்கொரிய சென்று வந்தார் இருப்பினும் அதுவும் பலனளிக்காத நிலையில் அடுத்து ஆயுர்வேத முறையில் சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் நிலையில் இனி படங்களில் நடிப்பதில்லை எனும் முடிவை தீர்க்கமாக எடுத்து உள்ளதாக சமந்தாவின் நட்பு வட்டரங்கள் கூறி வருகின்றனர். இநிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது…….