தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இன்றைக்கு படங்களில் அவ்வளவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டே விலகி போனதோடு பலரும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் தனது வசீகரமான தோற்றம் தேர்ந்த நடிப்பால் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்து பலரின் கனவு கன்னியாக இன்றளவும் இருந்து வருபவர் பிரபல முன்னணி

நடிகை நமீதா. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம் அந்த அழ;அளவிற்கு தனது நடிப்பு மற்றும் அழகால் பலரையும் கவர்ந்து இருந்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் . இதனைதொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடிப்பதை தாண்டி இவருக்கு கில்மா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கே அதிகளவு வாய்ப்பு வந்த நிலையில் அதிலும் நடித்து

தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் படங்களில் நடித்து வந்ததை அடுத்து பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவ்வாறு இருக்கையில் கடந்த 2017-ம் ஆண்டு துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபரான வீரேந்திர சௌத்திரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் முழுதும் நடிப்புக்கு முழுக்குபோட்டு தனது குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்

இவருக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் இரட்டை குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என இருவருக்கும் பெயர் வைத்து இருந்தார்கள். இப்படி இருக்கையில் நமீதா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் தனது கர்ப்ப காலத்தை நினைவில் வைத்திருக்கும் வகையில் வயிற்றின் மேல் கைவைத்தபடி உள்ள அச்சை எடுத்து அதன் மேல் வர்ணம் பூசி சிலையாக தனது வீட்டில் வைத்து உள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……