சின்னதிரையில் பிரபல முன்னணி தனியார் தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் தற்போது வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது அதன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட மாறுதல்களை கொண்ட நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக 21 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இறுதி வாரத்தில் மீதம் எழு போட்டியாளர்கள் உள்ளார்கள். இப்படி இருக்கையில் இந்த சீசனில் மக்கள் மத்தியில்

இருந்து தேர்வு செய்யபட்டு பிக்பாசில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சர்ச்சை நாயகி தனலட்சுமி. சோசியல் மீடியாவில் டிக்டாக் செயலியின் மூலமாக பல வீடியோக்களை வெளியிட்டு அதில் நடித்து அதன் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இதையடுத்து இதன் மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் தனது துடிப்பான செயலாலும் கோபத்தாலும் பிக்பாஸ் வீட்டில் தனித்து காணப்பட்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மேலும் சொல்லப்போனால் இந்த சீசன்

பிக்பாஸ் ஓரளவுக்கு விறுவிறுப்பாக போனதுக்கு காரணமாக இருந்ததில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு. இப்படி இருக்கையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் நாமினேசன் லிஸ்ட்டில் இருந்ததைஎ அடுத்து மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டு இருந்தார். மேலும் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 77 நாட்கள் இருந்து இருந்தார் இதனைதொடர்ந்து வெளியேறிய பின்னர் தன்னை மக்கள் எவிக்சனில் வெளியேற்றியது நியாயமற்றது என பொங்கி

இருந்தார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தனலட்சுமி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தனது கையில் பிக்பாஸ் லோகோவை பச்சை குத்தியதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் விருந்தினராக சென்றுள்ள தனலட்சுமி தான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……