தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஹீரோயினாக பல புதுமுக இளம் நடிகைகள் வந்து தங்களது இளமையான நடிப்பு மற்றும் தோற்றத்தால் பலரது மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ள போராடி வரும் நிலையில் அந்த காலத்தில் படங்களில் ஹீரோயினாக நடித்த பல முன்னனி நடிகைகள் திரையுலகை விட்டு மறைந்த நிலையிலும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து

தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீ வித்யா. இவர் அப்போதே தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரபல முன்னணி கர்நாடக இசை பாடகியான எம் .எல் வசந்தகுமாரியின் மகள் ஆன இவர் துவக்கத்தில் படங்களில் துணை நாயகியாக அறிமுகமானதை அடுத்து தனது நடிப்பு திறமையின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி  நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் பல படங்களில் குணசித்திர கேரக்டரிலும்

நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த 1976- ம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து இருவரும் இணைந்து சில வருடங்களே ஒன்றாக வாழ்ந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனைதொடர்ந்து பல வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்த ஸ்ரீ வித்யா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு இருந்த நிலையில்

அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இப்படி இருக்கையில் கடந்த 2006-ம் ஆண்டு உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும் தனது இறுதி படுக்கையில் தனது அணைத்து சொத்துகளையும் ஏழை எளிய குழந்தைகளுக்கு என எழுதி வைத்து விட்டு சென்று விட்டார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அவரது கணவர் புகைபடம் மற்றும் தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……