பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி பதினான்கு வாரங்களை கடந்த நிலையில் 21 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் தற்போது மீதம் எழு போட்டியாளர்கள் இறுதி வாரத்தில் டைட்டிலுக்காக போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் அசீம், கதிரவன், விக்ரமன், மைனா, எடிகே, ஷிவின், அமுதவாணன் ஆகியோர் உள்ள நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களை குஷிபடுத்தும் விதமாக வெளியில் இருந்து பலரும்

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசனில் வெளியேறிய அணைத்து போட்டியாளர்களும் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வரும் நிலையில் அசல் கோளாறு, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் வந்து தங்கள் பங்குக்கு போட்டியாளர்கள் இடையில் பிரளயத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் எவிக்சனில் அமுதவாணனை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டு உள்ள

நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பலமாக இருந்து வருகிறது. இதையடுத்து மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அசீம் மற்றும், விக்ரமன், ஷிவின் போன்றோர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தும் வரும் நிலையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இரண்டு இடத்தில் இருந்து வருபவர்கள் எடிகே மற்றும்

கதிரவன் இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என எண்ணி வந்த நிலையில் எடிகே மிகவும் குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில்  வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……