தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஹீரோவாக பல துறைகளில் இறங்கி கலக்கி வரும் நிலையில் திரையுலகில் தனது பயணத்தை இசையமைப்பாளராக தொடங்கியதை அடுத்து தனது துடிப்பான மற்றும் மாறுபட்ட இசையால் பல இளைஞர்களையும் ரசிகர்களாக மாற்றிக்கொண்டதை அடுத்து தற்போது ஹீரோவாக நடித்து பல முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான நான் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பால் பலரது கவனத்தையும் கவர்ந்ததை அடுத்து தொடர்ந்த பல நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் ஹீரோவாக நடித்து வருகிறார் அதோடு பல படங்களை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். இப்படி இருக்கையில் விஜய் ஆண்டனி உடல்நலகுறைவு

காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விஜய் ஆண்டனி தரப்பினரிடம் விசாரிக்கையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கி அதில் ஹீரோவாக அவரே நடித்து வரும் நிலையில் அதன் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அதன் படபிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு காட்சியின் போது தவறுதலாக காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளான அவரது ரசிகர்கள் அவர் நல்லபடி மீண்டு வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்…….