பொதுவாக சினிமாவில் படங்களில் ஹீரோ ஹீரோயின்களை தாண்டி அந்த படங்களில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் அந்த படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் எதாவது ஒரு வகையில் தங்களது இயல்பான நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அவர்கள் வளர்ந்த பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு

மாறிப்போனதோடு பலரும் தற்போது திரையுலகில் நடித்தும் வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் குருவி இந்த படத்தில் இவருக்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை ஷாதிகா. தனது குழந்தை பருவத்தில் இருந்து படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இவர் முதலில் பிரபல இயக்குனர் அரிராசன் இயக்கத்தில் வெளிவந்த மங்கை எனும் சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில்

அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து அரசியல் பிரமுகரும் நடிகருமான சீமானின் நடிப்பில் வெளிவந்த வீரநடை படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மேலும் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளதோடு நான் மகான் அல்ல படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைதொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சுட்டி

டிவியில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். மேலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இதையடுத்து அந்த புகைபடத்தில் அம்மிணியை பார்த்த பலரும் குருவி படத்துல வந்த பொண்ணா இது என வாயடைத்து போனதோடு அவரை வர்ணித்து தள்ளி வருகின்றனர்……

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Shathiga (@i_shathiga)