திரையுலகில் படங்களில் தற்போது பல இளம் நடிகைகள் வந்துவிட்ட காரணத்தால் பல முன்னணி நடிகைகளுக்கும் படங்களில் அவ்வளவாக ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் பல முன்னணி நடிகைகளும் இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய் விட்டனர் எனலாம். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருவதோடு சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் நடித்தும் வருகிறார். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில்

ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான அழகு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகை சங்கீதா. மேலும் இவர் ஹீரோயினாக நடித்ததை காட்டிலும் கதைக்கு ஏற்ப பல மாறுபாட்ட கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி பலரையும் வியக்க வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் ஹீரோயினாக நடிக்கும்

வாய்ப்புக்கள் மறுக்கப்ட்டதை அடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் சங்கீதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பாடகரான கிரிஷை காதலித்து திருமணம்

செய்து கொண்டார் மேலும் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு ஷிவியா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இதையடுத்து தனது குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடிய சங்கீதா அதில் எடுத்த பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவரது மகளை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்………