சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார் தொலைகாட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெகு பிரபலமாக ஓடிகொண்டிருக்கும் முன்னணி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசபோராட்டத்தை மையமாக நகரும் நிலையில் இந்த தொடரில் மீனா எனும் கதாபத்திரத்தில் நடித்து தனது நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தவர் பிரபல முன்னணி

சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார். இதையடுத்து இவர் இந்த தொடரை தொடர்ந்து பல முன்னணி தொடர்களில் நடித்து வருவதோடு தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஹேமா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தான் மருத்துவமனையில் இருப்பதாக

கூறியிருந்தார். இந்நிலையில் அது குறித்து விளக்கம் கேட்டபோது அவர் கடந்தா சில மாதங்களுக்கு முன்னர் தனது மார்பகத்தில் சிறயதாக கட்டி ஒன்று இருந்ததை அடுத்து அதை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றி இருந்தார். அதனைதொடர்ந்து அதற்காக ரெகுலர் செக்கப்புக்கு ஹாஸ்பிடல் சென்று வந்த நிலைல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நான் ஹாஸ்பிடல் போகாத நிலையில் அந்த இடத்தில் எனக்கு தொடர்ந்து அதிகமான வலி இருந்து கொண்டே இருந்தது. இதனால் உடணே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்த்தபோது அவர்கள், அறுவை சிகிச்சை செய்தபின் கட்டி இருந்த இடம் காலியாக இருந்ததால் அதனுள்

வேஸ்ட் வைத்து தையில் போட்டுள்ளதாக கூறினார்கள். இந்நிலையில் அதிலிருந்து வலி இருந்து வந்தா நிலையில் இது குறித்து டாக்டரிடம் கேட்டபோது, ஒருவேளை ஹார்மோன் சேன்ஜ் காரணமாக அந்த வலி இருக்ககூடும் எனவும் அதனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்கள். மேலும் எனக்கு இப்போது நன்றாக உள்ளதை அடுத்து யாருக்காவது உடலில் இதுபோன்ற வலிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம் அலட்சியமாக இருந்து விடாதீர்கள் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……