பொதுவாக திரையுலகில் படங்களில் பொறுத்தவரை ஹீரோ எந்த அளவிற்கு முக்கியமோ அதை காட்டிலும் அவர்களுக்கு நிகராக நடிக்கும் வில்லனாக நடிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து சினிமாவில் பல முன்னனி நடிகர்கள் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வந்த நிலையில் தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி

வருபவர் பிரபல முன்னணி நடிகர் ஆர்கே சுரேஷ். இவர் தனது திரைபயணத்தை பட தயாரிப்பாளராக தொடங்கிய நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானர். தனது முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பால் பலரையும் வியக்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை

ஏற்படுத்தி கொண்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னனி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களை தயாரித்தும் வருவதோடு பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தும் வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து

கொண்டார் மேலும் இவர்களுக்கு பெண் குழந்தை ஒருவரும் உள்ளார். இதையடுத்து தற்போது இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்து வரும் நிலையில் எனது குழந்தை நலமுடன் மீண்டு வரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் வேண்டிகேட்டுகொள்கிறேன் என தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்………