பொதுவாக திரையுலகில் படங்களில் ஹீரோ ஹீரோயினை தாண்டி அந்த படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில காட்சிகளே வந்த போதிலும் தங்களது சுட்டித்தனமான நடிப்பு மற்றும் பேச்சால் பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்து தங்களுக்கு என தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைபடம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் தளபதி விஜய், சூர்யா, ராதாகிருஷ்ணன், தேவயாணி, ராதாரவி என பல ,முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் சிறுவயது விஜயாக நடித்து தனது நடிப்பின் மூலம் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சிறுவன் பரத் ஜெயந்த். இவர் குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள நிலையில் தொடர்ந்து பிசியாக பல படங்களில்

நடித்து வந்த நிலையில் ஒரு கட்டடத்துக்கு மேல் நடிப்புக்கு முழுக்கு போட்டு தனது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனைதொடர்ந்து லயோலா கல்லூரியில் தனது விஷுவல் கம்புனிகேசன் படிப்பை முடித்த மாடலிங் மீது கொண்ட பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இளமை நாட்கள் எனும் படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை

தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்திலும் உதவி இயக்குனராக  பணிபுரிந்து இருந்தார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் அவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்தா புகைபடத்தில் அவரை பார்த்த பலரும் பிரண்ட்ஸ் படத்தில் நடிச்ச சின்ன பையனா இது என வாயடைத்து போயுள்ளனர்……