பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை அந்த காலத்தில் இருந்து பலரும் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் போதிலும் இதில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மற்றும் சினிமாவில் தங்களது நடிப்பு திறமையின் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இதில் பலரும் என்னதான் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அவர்களுக்கு எதிர்பார்த்த

வரவேற்பும் பிரபலமும் கிடைக்காமல் போகிறது எனலாம். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த உன்னாலே உன்னாலே படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் வினய். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தும் இவருக்கு போதிய வரவேற்பு ஹீரோவாக மக்கள் மத்தியில் கிடைக்காத நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த

வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் கூட வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இதனைதொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழிப்படங்களில் வில்லனாக நடித்து வரும் நிலையில் இவரும் பிரபல மலையாள முன்னணி நடிகையான விமலா ராமனும் காதலித்து வருவதாக பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் இருவரும் எந்த வித

பதிலும் கொடுக்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் விமலா ராமன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் விமலா ராமனும் வினயும் நெருக்கமாக இருப்பதோடு அதில் மீண்டும் எனது குடும்பத்துடன் உள்ளேன் என கூறியுள்ள நிலையில் இருவரும் காதலிப்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார் விமலா ராமன். இதையடுத்து இந்த பதிவு மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……