தமிழ் சினிமாவில் பொறுத்தவரை வெள்ளிதிரையை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வரும் நிலையில் இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டு திரையுலகில் பல படங்களில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் வசீகரமான தோற்றம் மற்றும் அழகால் பல இளைஞர்கள் மற்றும் திரையுலகினர்

மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த மேயாத மான் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல முன்னணி இளம் நடிகை பிரியா பவானி சங்கர். தனது முதல் படத்திலேயே பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டதை அடுத்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் கூட ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓ மனபெண்ணே படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இதனைதொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை குதுகலபடுத்தி வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக வீடு ஒன்று வாங்கியுள்ளதாக பிரியா பவானி சங்கர் இணையத்தில் பதிவிட்டதை அடுத்து தற்போது மேற்கொண்டு புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ள நிலையில் ரெஸ்டாரன்ட் திறந்துள்ள வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் இணையத்தில் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்………..