பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொட்னகி 106 நாட்களை கடந்த நிலையில் நேற்றைய நாளில் நாளில் அதன் கிராண்ட் பைனல் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று இருந்தது. இதனைதொடர்ந்து 21 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் இறுதி வாரத்தில் பைனல் போட்டியில் மீதம் மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலுக்காகவும் பரிசுதொகையான ஐம்பது லட்சத்துக்கும் போட்டிபோட்டு வந்த நிலையில் அசீம் , விக்ரமன் , ஷிவின் இவர்கள் மூவரில் யார் அந்த டைட்டிலை

வெல்ல போகிறார்கள் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில் பலரது முடிவாக இருந்தது அசீம் அல்லது விக்ரமனாக இருந்த நிலையில் இறுதியாக அசீம் அந்த டைட்டிலை தட்டி சென்றார். பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி முதல் வாரத்தில் இருந்து இறுதி வாரம் வரை அணைத்து வாரமும் தொடர்ந்து நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து வந்த நிலையிலும் மக்களின் ஆதரவு காரணமாக எல்லா வாரங்களும் காப்பாற்றப்பட்டு வந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில்

பலவிதமான சர்ச்சைகள், வாக்குவாதங்கள் என பலவும் இவர் மீது இருந்து வந்தா நிலையிலும் இவர் மக்கள் மத்தியில் இருந்த பிரபலத்தின் காரணமாக இந்த டைட்டிலை தன் வசமாக்கி கொண்டார். இதனைதொடர்ந்து அவருக்கு பரிசுத்தொகையாக ஐம்பது லட்சம் கிடைத்தது மட்டுமின்றி பிக்பாஸ் டிராபி கிடைத்ததோடு இம்முறை சிறப்பு பரிசாக  பதினாறு லட்சம் மதிப்புள்ள காரும் அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. இதையடுத்து அசீம் பிக்பாஸ் வீட்டில் மொத்தம்

106 நாட்கள் இருந்த அவர் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அதன்படி இவருக்கு ஒரு நாளைக்கு சம்பளமாக சுமார் 25 ஆயிரம் வரை பேசப்பட்ட நிலையில் அவருக்கு மொத்த சம்பளம் ,மற்றும் பரிசுதொகை என சேர்த்து ஒரு கோடிக்கு மேல் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த தகவல்கள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..