தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் விளைவாக பல முன்னணி திரையுலக பிரபலங்களும் நம்மை விட்டு விலகும் வகையில் காலமாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் எனும் படத்தின் மூலமாக சினிமாவில் தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனரும் நடிகருமான

ராமதாஸ். இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதோடு பல படங்களில் எழுத்தாளராகவும் வேலை செய்து உள்ளார். இதனைதொடர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான காபி வித் காதல் படத்திலும் சிறப்பு

தோற்றத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் நேற்று இரவு எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையிலும் இன்று அதிகாலை அவர்

சிகிச்சை பலனின்றி காலமானர் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து முன்னனி திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருவதோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து இந்தா தகவல்கள் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது…….