தமிழ் சினிமாவில் 80,90-களின் காலகட்டத்தில் படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டனர் எனலாம் இருப்பினும் அவர்கள் தங்களது வசீகரமான அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இன்றளவும் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை தக்க வைத்து உள்ளனர். அந்த வகையில் அந்த காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன்

 

ஹீரோயினாக நடித்து தனது நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஷோபனா. இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஏறக்குறைய நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் பிரபல பரதநாட்டிய கலைஞரான அம்மிணி தனது நடன திறமையால் பல விருதுகளையும்

வாங்கி குவித்துள்ளார். இதனைதொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் சினிமாவை விடுத்து நடன பள்ளி ஒன்றை உருவாக்கி அதை சிறப்பாக நடத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் அம்மிணி தனது இளமை காலம் முதல் தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையிலும் நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் திருமணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இருப்பினும் கடந்த

2011-ம் ஆண்டு குழந்தையின் மீது கொண்ட ஆசையால் தனக்கென பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் மேலும் அந்த குழந்தைக்கு ஆனந்த் நாராயணி சந்திரகுமார் என பெயரும் வைத்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய நிலையில் அந்த புகைப்படத்தில் அவரது மகளை பார்த்த பலரும் என்னது இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்க என வாயடைத்து போனதோடு அவரை வர்ணித்து வருகின்றனர்……