சினிமாவில் தற்போது பல துறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தனது திரைபயணத்தை இசையமைப்பாளராக தொடங்கி தனது இசையால் பல இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டவர் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால்

நான் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்துடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகத்தில் அவரே இயக்கி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இந்த படபிடிப்பு மலேசியாவில் நடந்து வந்த நிலையில் அங்கு லங்கா தீவில் கடலில் சேஸிங் காட்சி படமாக்கும்போது

தவறுதலாக விஜய் ஆண்டனி வந்த பைக்போட் எதிரே இருந்த போட்டின் மீது மோதி பலத்த விபத்துக்கு ஆளானர். அவரது முகம் தாடை எல்லாம் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார். அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்டு வரும் நிலையில் அவரது தற்போதைய நிலை குறித்து அவரே தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை

பதிவிட்டுள்ளார். அதில், மூக்கு மற்றும் தாடை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது மேலும் தற்போது ஓரளவு பேச முயற்சித்து வருவதாகவும் விரைவில் நலமுடன் மீண்டு வருவேன் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் அவர் குணமடைந்து நலமுடன் பிரர்த்தனை செய்து வருகின்றனர்…….