பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக பைனல் நடந்து முடிந்ததை அடுத்து இந்த சீசன் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகியிருந்தார். இதனைதொடர்ந்து இந்த சீசனில் மற்ற சீசன்களை காட்டிலும் பல மாறுதல்களை பிக்பாஸ் கொண்டு வந்த நிலையில் இதில் போட்டியாளர்களாக அதிகளவில் மக்கள் மத்தியில் பரிச்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்து

கொண்டனர் இருப்பினும் வழக்கம் போல் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இதில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஆயிஷா. இவர் இதே சேனலில் ஒளிபரப்பான பிரபல முன்னணி தொடரான சத்யா சீரியலின் மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து இந்த சீரியலில் கிடைத்த பிரபலத்தை தாண்டி மேலும் தன்னை பிரபலபடுத்தி கொள்ளும் முனைப்பில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில்

ஒருவராக கலந்து கொண்ட இவர் ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு மேல் இருந்த நிலையில் பல சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்களில் சிக்கி மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமானார். இவ்வாறு இருக்கையில் அம்மிணி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரது முன்னாள் காதலர் குறித்த பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஆயிஷா தனது

இணைய பக்கத்தில் தனது தற்போதைய காதலருடன் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் நெருக்கமாக கட்டிபிடித்தபடி இருக்கும் நிலையில் அவரது முகத்தை காட்டாமல் தனது காதலை மட்டும் வெளிபடுத்தும் வகையில் அம்மிணி பதிவிட்டிருக்கும் பதிவை பார்த்த பலரும் பல விதமான கருத்துகளை கூறி வருவதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்………