தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிதாக பல இளம் நடிகைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் பிரபல முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தான் சினிமாவில் இனி நடிக்கபோவதில்லை எனவும் முற்றிலுமாக இதிலிருந்து விலகபோவதகவும் கூறியதாக பல தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கன்னடத்தை மையமாக கொண்ட நிலையில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இன்றைக்குதமி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என

பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது வசீகர அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் கன்னட திரையுலகை அவமதித்து பேசியதாக அவர் புகார் அளிக்கபட்ட நிலையில் கன்னட திரையுலகம் அவர் இனி நடிக்க தடை விதித்ததாக கூறப்பட்டது. இபப்டியொரு நிலையில் வாரிசு படத்தில்

நடித்த ராஷ்மிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, பலரும் அவரை சூழ்ந்து பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் இதனால் பெரிதளவில் மனமுடைந்து போன ராஷ்மிகா அதற்கு பதில் கூறும் வகையில், மக்களுக்கு என் உடலிலேயே பிரச்சனை இருக்கிறது நான் வொர்கவுட் செய்து பிட்டாக இருந்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறார்கள் அதுவே எதுவும் செய்யவில்லை என்றால் குண்டாக இருப்பதாக குறை கூறுகிறார்கள், அதேபோல் நான் அதிகமாக பேசினால் கிரின்ஜ் என்கிறார்கள் எதுவும் பேசவில்லை என்றால் திமிராக இருப்பதாக

சொல்கிறார்கள் ஆக அவர்களுக்கு நான் மூச்சு விட்டாலும் பிரச்சனை மூச்சு விடவில்லை என்றாலும் அவர்களுக்கு பிரச்சனை இப்படி இருக்கும்போது நான் என்னதான் செய்வது என புலம்பி கொட்டியுள்ளார். இதனைதொடர்ந்து இதனைபார்த்த அவரது ரசிகர்கள் இவரை கலாயிக்கும் நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து இதுபோன்ற ட்ரோல்கள் வந்தால் நிச்சயம் நான் சினிமாவை விட்டு விலகபோவதாக ராஷ்மிகா கூறியுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..