தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தனது நடிப்பால் பலரது

கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிலையில் தொடர்ந்து அம்மினிக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைதொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு இருக்கையில் கைவசம் பல படங்களை வைத்து பிசியாக நடித்து வரும் அம்மிணி தற்போது மாமன்னன், சைரன்,

ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்துள்ள நிலையில் இந்த விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டபோது, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த மாணவன் ஒருவரை காதலித்து வந்ததாகவும் மேலும் இருவரும் 13

 

வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்கள் இருவரது காதலையும் இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் கோலாகலமான முறையில் திருமணம் நடக்க இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் சமீபத்தில் கூறியுள்ளார். மேலும் அம்மிணியின் காதலர் தற்போது சொந்தமாக ரிசார்ட் ஒன்றை நிறுவி நடத்தி வருவதாகவும் கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..