தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல பிரமாண்டமான படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன அதேபோல் பல புதுமுக இயக்குனர்களும் வந்த வண்ணாம் இருப்பதோடு பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பல இளைஞர்களின் மத்தியில் வெகு பிரபலமாக இருப்பதோடு முன்னணி இயக்குனர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்ட இவர் தனது கல்லூரி படிப்பை

முடித்து பிரபல வங்கியில் பணிபுரிந்து வந்த நிலையில் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குறும்படங்களை இயக்கி வந்தது பல போட்டிகளில் கலந்து கொண்டதை அடுத்து பிரபலமான நிலையில் தனது முதல் படமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாநகரம் படத்தை இயக்கியிருந்தார். தனது முதல் படத்திலேயே  மக்கள் மற்றும் திரையுலகில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக பிரபல நடிகர் கார்த்தியை வைத்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கைதி படத்தை இயக்கி பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதனைதொடர்ந்து பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கிய நிலையில் தளபதி விஜயை

வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார் மேலும் அடுத்த கட்டமாக பிரமாண்ட படைப்பாக பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியதை அடுத்து உலகளவில் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இந்நிலையில் தற்போது முன்னணி இயக்குனர்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் லோகேஷ் அவர்கள் தளபதி விஜய் அவர்களை தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்து வரும் நிலையில்

லோகேஷ் கனகராஜ் அவர்களின் குடும்பம் குறித்த பல தகவல்கள்  மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் கடந்த 2012-ம்  ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இதனைதொடர்ந்து இவர்களுக்கு ஆத்விகா லோகேஷ் எனும் மகனும் ஆருத்ரா லோகேஷ் எனும் மகளும் உள்ளார்கள் . இந்நிலையில் இவர்களது குடும்ப புகைபடம் வெளியானதை அதில் அவரது மனைவியை பார்த்த பலரும் இவங்க தான் இவரோட மனைவியா என வாயடைத்து போயுள்ளனர்…….