தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் அட்லீ. பிரபல முன்னணி இயக்குனரான சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிலையில் இயக்குனராக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராஜா ராணி படத்தை இயக்கி பலரது கவனத்தையும் தன்

பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த நிலையில் தளபதி விஜய் அவர்களை தெறி, மெர்சல் போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இதனைதொடர்ந்து தற்போது பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அட்லீ கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக ப்ரியா தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனைதொடர்ந்து எட்டு வருடங்கள் கழித்து தாங்கள் பெற்றோர் ஆக போகும் மகிழ்ச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு

செய்திருந்தார் அட்லீ. மேலும் இந்த விழாவில் பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்திய நிலையில் தளபதி விஜய் அவர்களும் அதில் கலந்து கொண்டார். இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளில் அட்லீ மற்றும் ப்ரியா ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது இதையடுத்து இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் அட்லீ பதிவிட்டு உள்ள பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……..

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)