சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் நிகழ்ச்சிகளும் மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை

போட்டியை மையமாக ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமாக நடித்து வருபவர் பிரபல நடிகை அறந்தாங்கி நிஷா. இந்நிலையில் தொடர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பெண் காமெடியனாக நடித்து வந்த நிலையில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் தன்னை

பிரபலபடுத்தி கொண்டார் . அது மட்டுமின்றி  சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிஷா தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் அதில் தொடர்ந்து பல வீடியோக்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டின் ஹோம் டூரை போட்டுள்ளார். திருச்சியில் தான் பிரமாண்டமாக கட்டி வரும் அந்த வீட்டின் வீடியோவை இணையத்தில் பதிவிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……..