கடந்த சில வாரங்களாக இணையத்தில் பெரிதளவில் பேசபட்டு வரும் நிகழ்வு என்றால் அது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான அப்டேட்கள் தான். இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே மாஸ்டர் படத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்து இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் அதே கூட்டணியில் இந்த படத்தை இயக்கி வருகின்றனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு

முன்னர் உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உலகளவில் பிரபலமாகியிருந்தார். மேலும் இந்த படத்தில் இதற்கு முந்தைய படங்களின் கதையையும் இணைத்து ஹாலிவுட் லெவலில் லோகி சினிமாடிக் யுனிவர்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த படத்திலும் அது போன்ற பல திருப்பங்கள் எதிர்பார்க்கலாம். இப்படி இருக்கையில் இந்த படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து

ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பல அப்டேட்களை அள்ளி கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பலரும் பலவிதமான யூகங்கங்களை வைத்து வரும் நிலையில் இதற்கு முந்தைய படங்களில் எல்லாம் அந்த படத்தில் ஹீரோவின் பெயர் அல்லது அவரது அடையாளத்தை டைட்டிலாக வைத்து இருந்தார்

அதேபோல் இந்த படத்திலும் தளபதி விஜயின் பெயர் அல்லது அவர் கேங்ஸ்டார் ஆக இருக்கும் நிலையில் அதை அடிப்படையாக வைத்து டைட்டில் இருக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது. இதையடுத்து இன்னும் இரு தினங்களில் இந்த படத்தின் ப்ரோமோ வெளியாகவுள்ள நிலையில் அதில் படத்தின் டைட்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது…….