திரையுலகில் பொறுத்தவரை தற்போது படங்களில் ஏராளமான புதுமுக இயக்குனர்கள் , நடிகர்கள் என வந்துவிட்ட நிலையில் அதற்கு நிகராக பல இசையமைப்பளார்களும் தொடர்ந்து பலரும் புதிதாக வந்த வண்ணம் இருப்பதோடு தங்களது இசை திறமையின் மூலமாக பலரது மனதை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து தங்களது தனித்துவமான இசையால் பலரது மனதை கட்டிபோட்டு இருப்பதோடு ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு

இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது இசையால் இளைஞர்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பதோடு இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இருப்பதோடு பல விதமான தேசிய மற்றும் மாநில விருதுகளையும் வாங்கியுள்ளார். இவ்வாறு இருக்கையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில்

இசையமைத்து வரும் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் தனது சிறப்பான இசையால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு திருமணமாகி மகள் மற்றும் மகன் ஒருவர் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மகன் அமின் இணையத்தில் தனது ஒரு நிமிட பாடலை வெளியிட்டுள்ளார் . அதன்படி இணையபக்கத்தில் மெட்டா

நிறுவனம் நடத்திய ஒரு நிமிட பாடல் போட்டியில் பென்னி தயாள், யுவன் சங்கர் ராஜா என பலரும் கலந்து கொண்ட நிலையில் இவரும் கலந்து கொண்டு அடியே சோனாலி எனும் பாடலை இசையமைத்து உள்ளார் மேலும் இந்த பாடலை ஏஆர் ரஹ்மானும் , குட்டி ரேவதியும் பாடியுள்ளார்கள். இதனைதொடர்ந்து இந்த பாடல் இணையத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேலாக பார்க்கப்பட்டு உள்ளது………