தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் படங்களில் கதாநாயகியாக நடித்து தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தது மட்டுமின்றி பலரின் கனவு கன்னியாக இருந்து வந்த பல முன்னணி நடிகைகளும் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென

தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை சங்கவி. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த முதல் படமான அமராவதி படத்தில் மூலம் தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன்

ஹீரோயினாக நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் வெள்ளிதிரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல முன்னணி தொடர்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கடந்த 2016-ம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு தனது குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்த

நிலையில் இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கவி அடிக்கடி சில புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் வீடியோ பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவரது மகளை பார்த்த என்னது இவருக்கு இவ்வளவு  பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……..